கொரோனா மீண்டும் பரவுவதால் போர்ச்சுக்கலில் வாராந்திர பொதுமுடக்கம் அறிவிப்பு
போர்ச்சுக்கல் நாட்டில் மீண்டும் கொரோனா தொற்று பரவுவதையடுத்து அங்கு வாராந்திர பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.
தலைநகர் லிஸ்பனில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது. இதனால் சாலைகள் வெறிச்சோடிக் காணப்பட்டன.
பொதுமக்கள் வெளியில் வருவதற்கும் தடை விதிக்கப்பட்டதால் தேவாலயங்கள் அமைதியாகக் காணப்பட்டன. ஆனால் மருத்துவம், பால் உள்ளிட்டவைகளுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டிருந்தது. நேற்று ஒரே நாளில் நாடு முழுவதும் 6 ஆயிரத்து 35 பேருக்கு புதிதாகத் தொற்று ஏற்பட்டதுடன் 76 பேர் உயிரிழந்துள்ளனர்.
Comments