சென்னை கோயம்பேடு சந்தையில் 7 மாதங்களுக்குப் பின் சில்லறை விற்பனை தொடக்கம்
சென்னை கோயம்பேடு சந்தையில் 7 மாதங்களுக்குப் பிறகு காய்கறி சில்லறை விற்பனை இன்று தொடங்கியது.
கொரோனா ஊரடங்கால் மூடப்பட்டு இருந்த சந்தையில், மொத்த வியாபாரத்திற்கு மட்டும் கடந்த செப்டம்பர் 28ம் தேதி தொடங்கப்பட்டது.
அதன் பிறகான அரசு மற்றும் வியாபாரிகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தையில், சந்தையில் சில்லறை வியாபாரத்தை மூன்று கட்டங்களாக தொடங்க அனுமதி அளிக்கப்பட்டது. அதன்படி, கோயம்பேடு சந்தையில் ஏ முதல் ஜி பிளாக் வரையில், சில்லறை வியாபாரிகள் காய்கறி விற்பனையைத் தொடங்கியுள்ளனர்.
சென்னை கோயம்பேடு சந்தையில் 7 மாதங்களுக்குப் பின் சில்லறை விற்பனை தொடக்கம் #Chennai | #KoyambeduMarket https://t.co/pumEZvFuoj
— Polimer News (@polimernews) November 16, 2020
Comments