தீவிரவாதத்திற்கு இந்தியா நிதியுதவி அளிப்பதாக பாகிஸ்தான் அபாண்ட குற்றச்சாட்டு-விரக்தியின் வெளிப்பாடு என மத்திய அரசு கண்டனம்
இந்தியா தீவிரவாதத்திற்கு நிதியுதவி அளிப்பதாக கூறிய பாகிஸ்தானை, வெளியுறவு அமைச்சகம் கடுமையாக கண்டித்துள்ளது.
டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவஸ்தவா, இந்தியாவிற்கு எதிராக பாகிஸ்தானின் மற்றொரு பயனற்ற குற்றச்சட்டு இது என கூறினார்.
அவர்கள் கூறும் ஆதாரங்கள் கற்பனை அடிப்படையில் உருவாக்கப்பட்டதோடு, பாகிஸ்தானின் தீவிர செயல்பாடுகளை உலகம் அறிந்திருக்க, விரக்தி காரணமாக இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதாகவும், அனுராக் ஸ்ரீவஸ்தவா கூறினார்.
Comments