புதுச்சேரி அருகே மீனவ கிராமத்தில் கடல் அரிப்பு காரணமாக 10-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம்

0 1789
புதுச்சேரி அருகே மீனவ கிராமத்தில் கடல் அரிப்பு காரணமாக 10-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம்

புதுச்சேரி அருகே உள்ள மீனவ கிராமத்தில் கடல் அரிப்பு காரணமாக 10-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன.

கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள  பொம்மையார்பாளையம் கிராமம் 2004ம் ஆண்டு சுனாமியிலிருந்து  கடல் அரிப்பால் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறது.

இதுவரை  50 க்கும் மேற்ப்பட்ட வீடுகளும்,100க்கும் மேற்பட்ட தென்னை மரங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும்,மீன் காய வைக்கும் களம் மற்றும் சாலைகள் கடலுக்கு அடித்துச் செல்லப்பட்டுள்ளன.

இந்நிலையில் தற்போது மேலும் 10 க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன. இதையடுத்து அண்மையில் தொடங்கப்பட்ட தூண்டில் வளைவு அமைக்கும் பணியை விரைவுபடுத்தி முடித்து தர அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments