கட்சியை பதிவு செய்வதற்கான விண்ணப்பம் திரும்பப் பெறப்பட்டதா ? - எஸ்.ஏ.சி பதில்

0 4752
கட்சியை பதிவு செய்வதற்கான விண்ணப்பம் திரும்பப் பெறப்பட்டதா ? - எஸ்.ஏ.சி பதில்

கட்சியை பதிவு செய்ய தேர்தல் ஆணையத்திடம் கொடுத்த விண்ணப்பத்தை திரும்பப் பெற்றதாக பரவும் தகவல் குறித்து தமக்குத் தெரியாது என எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜயின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் “அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம்” என்ற பெயரில் கட்சி தொடங்கி, அதனை பதிவு செய்ய தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பித்தார்.

தந்தை தொடங்கியுள்ள கட்சிக்கும் தனக்கும் தொடர்பு இல்லை என விஜய் அறிக்கை வெளியிட்ட நிலையில், கட்சியில்  கொடுக்கப்பட்ட பொறுப்பில் இருந்து தாம் விலகிவிட்டதாக அவரது தாய் ஷோபாவும் பேட்டியளித்தார்.

இந்த நிலையில், தனது கட்சியை பதிவு செய்ய தேர்தல் ஆணையத்திடம் கொடுத்த விண்ணப்பத்தை எஸ்.ஏ.சந்திரசேகர் திரும்பப் பெற்றதாக சமூக வலைதலங்களில் தகவல்கள் பரவின.

ஆனால் அதுகுறித்து தமக்குத் தெரியாது என்றும் தற்போது படப்பிடிப்பில் இருப்பதால் 20ஆம் தேதி பதிலளிப்பதாகவும் எஸ்.ஏ.சி தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments