மணிப்பூர் முதலமைச்சர் பிரண் சிங்குக்கு கொரோனா
மணிப்பூர் முதலமைச்சர் பிரண் சிங்குக்கு (Biren Singh) கொரோனா உறுதியாகியுள்ளது.
உடல்நிலை அசவுகரியமாக இருந்ததால், தாமாக முன்வந்து அவர் கொரோனா பரிசோதனை எடுத்துள்ளார். இதில் இன்று அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தத் தகவலை சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பிரண் சிங், தம்முடன் கடந்த சில நாள்களாக தொடர்பிலிருந்தோரை பரிசோதனை எடுக்கும்படியும், முன்னெச்சரிக்கையுடன் இருக்கும்படியும் கேட்டுக் கொண்டுள்ளார்.
மணிப்பூர் மின்சாரத்துறை அமைச்சரும், எம்எல்ஏ ஒருவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். எனினும் 2 பேரும் கொரோனாவிலிருந்து மீண்டு விட்டனர்.
Comments