தீபாவளிக்கு வெளியூர் சென்றவர்கள் ஊர் திரும்புவதற்கு சிறப்பு பேருந்து வசதி
தீபாவளி பண்டிகையையொட்டி,சொந்த ஊர் சென்ற பொதுமக்கள், சென்னை மற்றும் பிற நகர்களுக்கு திரும்புவதற்காக, அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில், 4 நாட்களுக்கு சுமார் 16 ஆயிரம் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
முதல் நாளான ஞாயிற்றுக்கிழமை வழக்கமான 2 ஆயிரம் பேருந்துகளுடன் சென்னைக்கு ஆயிரத்து 395 சிறப்பு பேருந்துகளும், சென்னை நீங்கலாக பிற நகரங்களுக்கு ஆயிரத்து 915 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன.
வருகிற 18ஆம் தேதி வரை, ஒவ்வொரு நாளும் வழக்கமான 2 ஆயிரம் பேருந்துகளுடன் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.
4 நாட்களும் 8 ஆயிரத்து 26 சிறப்பு பேருந்துகளுடன் மொத்தம் 16 ஆயிரத்து 26 பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் தெரிவித்துள்ளது.
Comments