இஸ்ரேல் பிரதமர் பதவி விலக வலியுறுத்தி தொடரும் போராட்டம்
இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு பதவி விலக வலியுறுத்தி அந்நாட்டு தலைநகர் ஜெருசலேமில் நூற்றுக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நீர்மூழ்கி கப்பல்கள் வாங்கியதில் ஊழல் நடைபெற்றதாக நேதன்யாகு மீது குற்றச்சாட்டு எழுந்தது.
மேலும், கொரோனா பேரிடரை கையாள்வதில் அரசு தோல்வியடைந்ததாகவும், இதற்கு பொறுப்பேற்று பிரதமர் ராஜினாமா செய்ய வேண்டும் எனவும் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், ஜெருசலேமில் உள்ள நேதன்யாகு வீட்டின் முன்பு கூடிய போராட்டக்காரர்கள், தேசியக்கொடிகளை ஏந்தி, அரசுக்கு எதிராக முழக்கமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Comments