நிரம்பும் நிலையில் செம்பரம்பாக்கம் ஏரி - தொடர் கண்காணிப்பில் அதிகாரிகள்

0 2866
நிரம்பும் நிலையில் செம்பரம்பாக்கம் ஏரி - தொடர் கண்காணிப்பில் அதிகாரிகள்

திருவள்ளூர் மாவட்டம் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 20 அடியை எட்டி, எந்த நேரமும் நிரம்பும் நிலையில் உள்ளதால் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

கிருஷ்ணா நதி நீர் மற்றும் மழை காரணமாக ஏரியின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.

மொத்த நீர்மட்டம் 24 அடியில் 21 அடியை எட்டியதும், பாதுகாப்பு கருதி உபரி நீர் திறக்கப்படுவது வழக்கம். தற்போது ஏரியின் நீர்மட்டம் 20.13 அடியாக உயர்ந்துள்ளது.

ஏரியின் மொத்த கொள்ளளவான 3 ஆயிரத்து 645 கன அடியில், 2 ஆயிரத்து 636 மில்லியன் கன அடி நீர் உள்ளது. வினாடிக்கு 390 கனஅடி  நீர் ஏரிக்கு வந்து கொண்டிருக்கிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments