தக்காளி பெட்டிக்குள் மறைத்து வைத்து கேரளாவிற்கு வெடிபொருட்கள் கடத்தல் - மினி லாரி பறிமுதல்

0 4929
தக்காளி பெட்டிக்குள் மறைத்து வைத்து கேரளாவிற்கு வெடிபொருட்கள் கடத்தல் - மினி லாரி பறிமுதல்

மினி லாரியில் தக்காளி பெட்டிக்கு அடியில் வெடிபொருட்களை மறைத்து வைத்து கடத்தி சென்ற தமிழகத்தை சேர்ந்த இருவரை கேரள மாநிலம் வாளையாறு பகுதியில் போலீசார் கைது செய்தனர்.

வாளையாறு சோதனை சாவடி அருகே கேரள போலீசார் வாகன தனிக்கையில் ஈடுபட்டிருந்த போது அந்த வழியாக தமிழகத்தில் இருந்து வந்த மினிலாரியை சோதனையிட்டனர்.

அதில்  தக்காளி பெட்டிக்கு அடியில் பாறைகளை வெடிவைத்து தகர்க்க  பயன்படுத்தும் வெடிபொருட்களை மறைத்து வைத்து கடத்தி சென்றது தெரியவந்தது.

இதனையடுத்து ஓட்டுநர் பிரபு மற்றும் ரவி ஆகிய இருவரை கைது செய்த கேரள போலீசார் 7 ஆயிரம் ஜெலட்டின் குச்சிகள் மற்றும் 7 ஆயிரத்து 500 டெட்டனேட்டர்களை பறிமுதல் செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments