பல ஆண்டுகளாக வாழ்ந்த தங்களது வீடுகளைத் தீயிட்டு எரித்த ஆர்மீனியர்கள்
நகோர்னா-காரபாக் பிரதேசத்தின் சில பகுதிகள் அஸர்பைஜான் வசம் செல்ல உள்ள நிலையில், அங்கிருந்து வெளியேறும் ஆர்மீனியர்கள் தங்கள் வீடுகளை தீ வைத்து எரித்து வருகின்றனர்.
ரஷ்யா மத்தியஸ்தம் செய்ததை அடுத்து, நாகோர்னா-காரபாக் எல்லைப் பகுதி தொடர்பாக இருநாடுகளுக்கும் இடையே ஏற்பட்ட போர் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது.
போர்நிறுத்த ஒப்பந்தத்தின் அடிப்படையில், ஆர்மீனியா வசம் இருந்த கல்பஜர் மாவட்டம் அஸர்பைஜானுக்கு சொந்தமாகியுள்ளது. இதையடுத்து அங்கு வசிக்க விரும்பாத ஆர்மீனிய மக்கள் பல ஆண்டுகளாக தாங்கள் வசித்து வந்த வீடுகளைத் தீயிட்டு எரித்தனர்.
Comments