தெலங்கானாவில் சொத்து வரியில் 50 சதவீதம் தள்ளுபடி-மக்களுக்கு தீபாவளி பரிசாக வழங்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவிப்பு
தெலங்கானாவில் 10 ஆயிரம் ரூபாய் வரை செலுத்த வேண்டிய சொத்து வரியில் 50சதவீதம் தள்ளுபடி செய்யப்படும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக பேசிய அமைச்சர் கே.டி.ராமாராவ், கொரோனாவைத் தொடர்ந்து மக்கள் எதிர்கொள்ளும் நிதி சிக்கல்களை கருத்தில் கொண்டு தீபாவளி பரிசாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.
அரசின் இந்த நடவடிக்கை மூலம் 31லட்சத்து 40ஆயிரம் குடும்பங்கள் பயன் அடையும் என்றும் அரசுக்கு கூடுதலாக 6ஆயிரத்து 326 கோடி ரூபாய் செலவாகும் என்றும் தெரிவித்தார்.
Comments