டெல்லியில் தடையை மீறி பட்டாசு வெடித்த மக்கள் -638 கிலோ பட்டாசுகள் பறிமுதல்
டெல்லியில் தீபாவளி அன்று பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் 638 கிலோ பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
தடை உத்தரவை மீறி பட்டாசு விற்பனை செய்ததாக 12பேர் மீதும், பட்டாசு வெடித்ததாக 14பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
டெல்லியில் வரும் 30 ஆம் தேதி வரை பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அதனை மீறி செயல்பட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Comments