பிரிட்டனில் பெட்ரோல், டீசல் கார் விற்பனையை தடை செய்ய அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்
பிரிட்டனில் வரும் 2030ஆம் ஆண்டு முதல் டீசல் மற்றும் பெட்ரோல் கார்களின் விற்பனைக்கு தடை விதிக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரிட்டன் சாலைகளை நாள்தோறும் ஆக்கிரமிக்கும் லட்சக்கணக்கான பெட்ரோல், டீசல் வாகனங்களால் அங்கு காற்று மாசு அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது.
இதனையடுத்து 2040ஆம் ஆண்டு முதல் பெட்ரோல், டீசல் கார்கள் விற்பனைக்கு தடை விதிக்க கடந்த 2017ஆம் ஆண்டு அந்நாட்டு அரசு முடிவு செய்தது.
பின்னர் அந்த முடிவு 2035ஆம் ஆண்டுக்கு மாற்றப்பட்டது.
இந்த நிலையில் 5 ஆண்டுகளுக்கு முன்பாகவே, அதாவது 2030ஆம் ஆண்டு முதலே, பிரிட்டனில், பெட்ரோல் டீசல் கார்கள் விற்பனைக்கு தடை விதிக்கப்படவுள்ளதாக ஃபினான்சியல் டைம்ஸ் பத்திரிக்கை தெரிவித்துள்ளது.
Comments