மகாராஷ்டிராவில் திங்கட்கிழமை முதல் வழிபாட்டுத் தலங்களைத் திறக்க அம்மாநில அரசு அனுமதி
மஹாராஷ்டிராவில் வரும் திங்கட்கிழமை முதல் வழிபாட்டுத் தலங்களைத் திறக்க அம்மாநில அரசு அனுமதியளித்துள்ளது.
கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் வழிபாட்டுத் தலங்கள் மூடப்பட்டுள்ளன.
ஊரடங்கில் மத்திய அரசு அறிவித்த தளர்வுகளுக்குப் பிறகு பல மாநிலங்களில் வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்பட்ட நிலையில், மகாராஷ்டிர அரசு மௌனம் காத்தது.
பாஜக உள்ளிட்ட கட்சிகள் வழிபாட்டுத் தலங்களைத் திறக்க தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்தன.
இந்த நிலையில், வரும் திங்கட்கிழமை முதல் வழிபாட்டுத் தலங்களைத் திறக்க அனுமதி அளிக்கப்படுவதாகவும் வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியிடப்படும் என்றும் அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
Comments