பலத்த எதிர்பார்ப்புகளுக்கிடையே வெளியானது மாஸ்டர் படத்தின் டீசர்
நடிகர் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் படத்தின் டீசர் பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியாகியிருக்கிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படம், கடந்த ஏப்ரல் மாதமே வெளியாக வேண்டியது.
கொரோனா பெருந்தொற்று, ஊரடங்கு காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டதால், பட வெளியீடு தள்ளிப்போனது. படத்தின் டீசர் தீபாவளியன்று வெளியாகும் என்று கூறப்பட்டிருந்த நிலையில், மாலை ஆறு மணியளவில் வெளியானது.
Comments