மடியில் கனமில்லை எனில் சுரப்பா பயப்பட வேண்டியதில்லை -அமைச்சர் ஜெயக்குமார்

0 1998

மடியில் கனமில்லை என்றால், விசாரணைக் குழு குறித்து அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சுரப்பா கவலைப்பட வேண்டியதில்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 132-வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது உருவப்படத்திற்கு அமைச்சர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சுரப்பா மீதான விசாரணையின் முடிவில், புகாரின் உண்மை தன்மை தெரிய வரும் என்றும், அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் பதிலளித்தார்.

அதிமுக-பாஜக கூட்டணியில் குழப்பமா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், தேர்தல் கூட்டணி வேறு கொள்கை ரீதியான கூட்டணி என்பது வேறு என தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments