ஸ்பேஸ் எக்ஸ் நிறுவன கேப்சூலைப் பயன்படுத்தி முதன்முதலாக விண்வெளிக்கு வீரர்களை அனுப்பும் நாசா

0 1776

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ட்ராகன் கேப்சூலைப் பயன்படுத்தி நாசா முதன்முதலாக விண்வெளிக்கு வீரர்களை அனுப்புகிறது. ரெசிலியன்ஸ் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த கேப்சூலில் 3 அமெரிக்க வீரர்களும், ஒரு ஜப்பானிய வீரரும் சர்வதேச விண்வெளி மையத்திற்குச் செல்கின்றனர்.

உள்ளுர் நேரப்படி நாளை இரவு 7.27 மணிக்கு புளோரிடாவின் கேப் கேனவரால் விண்வெளி மையத்தில் இருந்து ராக்கெட் ஏவப்படுகிறது. இந்த ராக்கெட் 8 மணி நேர பயணத்திற்குப் பின் சர்வதேச விண்வெளி மையத்தை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் கேப்சூல் மூலம் நாசா வீரர்கள் பயணிப்பது இதுவே முதன்முறை.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments