எதிரி விமானங்களை மின்னல் வேகத்தில் தாக்கும் இந்திய பாதுகாப்பு துறையின் ஏவுகணை சோதனை வெற்றி..!
தரையில் இருந்து வான் இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கும் விரைவு எதிர்வினை ஏவுகணை பரிசோதனையை இந்திய பாதுகாப்பு துறை வெற்றிகரமாக நடத்தி உள்ளது.
ஒடிசா மாநிலம் பாலாசோரில் உள்ள பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் தளத்தில் பரிசோதனை நடைபெற்றது. இதில் முப்பது கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள இலக்கை ஏவுகணை வெற்றிகரமாக தாக்கி அழித்தது.
ஏவிய பின்னர் மின்னல் வேகத்தில் இலக்கை தாக்கும் ஏவுகணை சோதனை வெற்றி என்று டிஆர்டிஓ அறிவித்துள்ளது. 8 முறையாக நடைபெற்ற இந்த சோதனையில் ஏவப்பட்ட ஏவுகணை சுமார் மணிக்கு 5803 கிலோ மீட்டர் வேகத்தில் பாய்ந்து சென்று இலக்கை தாக்கியதாக செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்த ஏவுகணை அனைத்து காலநிலைகளிலும், அனைத்து இடங்களிலும் இருந்து ஏவக்கூடியது. லடாக் எல்லையில் இந்த ஏவுகணைகள் தயார் நிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Comments