தீபாவளிக்கு பொருட்களை வாங்க கடைவீதிகள் தோறும் மக்கள் கூட்டம்... களை கட்டியது தீபாவளி விற்பனை..!

0 2729
நாளை விடிந்தால் தீபாவளி என்ற நிலையில் பொருட்கள் வாங்குவதற்காக தமிழகத்தின் பல்வேறு ஊர்களிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது...

நாளை விடிந்தால் தீபாவளி என்ற நிலையில் பொருட்கள் வாங்குவதற்காக தமிழகத்தின் பல்வேறு ஊர்களிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது...

சென்னை:

சென்னை தியாகராயநகர், புரசைவாக்கம், வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் புத்தாடைகள் வாங்க மக்கள் திரண்டனர். காவல்துறை சார்பில் உயர் கோபுரம் அமைக்கப்பட்டு, கண்காணிப்பு பணியில் போலீசார் ஈடுபட்டனர்.

தாம்பரம்:

தாம்பரம் சந்தையில் தீபாவளி பொருட்களை வாங்க ஏராளமானோர் குவிந்தனர். மக்கள் கூட்டத்தை ஒலிப்பெருக்கி வாயிலாக போலீசார் ஒழுங்குபடுத்தினர்.

ஈரோடு:

தீபாவளியை முன்னிட்டு, ஈரோடு மணிக்கூண்டு அருகே உள்ள ஜவுளிக்கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த, பல சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.

நெல்லை:

நெல்லை மாநகர கடை வீதிகளில் சாரல் மழையையும் பொருட்படுத்தாமல் தீபாவளி பொருட்களை வாங்க மக்கள் குவிந்தனர். கடைகளில் விற்பனையும் அமோகமாக நடைபெற்றது.

கோவை:

கோவையில் ஒப்பணக்கார வீதி, பெரிய கடை வீதி, ராஜவீதி உள்ளிட்ட இடங்களில் புத்தாடைகள், பட்டாசுகள், மளிகை பொருட்கள் வாங்க பொதுமக்கள் குவிந்தனர்.

சேலம்:

சேலம் சி.சி ரோடு, சின்னக்கடை வீதி, வ.உசி .பூ .மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் கூட்டம் அதிகம் காணப்பட்டது. 1100 போலீசார் குவிக்கப்பட்டு கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

திருச்சி: 

திருச்சி சின்னக்கடை வீதி உள்ளிட்ட பிரதான பகுதிகளில் இறுதிக்கட்ட வியாபாரம் களைகட்டியது.

மதுரை:

மதுரை விளக்குதூண் பகுதியில் துணிமணிகள் மற்றும் வீட்டுக்கு தேவையான பொருள்கள் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது.

தஞ்சை:

தஞ்சையில் புத்தாடை, பட்டாசு அழகு சாதன பொருட்கள் வாங்க மக்கள் திரண்டனர். பூச்சந்தையிலும் ஏராளமானோர் குவிந்தனர். மல்லி முல்லை செவ்வந்தி பூக்களின் விலை உயர்ந்துள்ளதால் பூ வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

புதுச்சேரி:

புதுச்சேரியின் பிரதான கடை வீதிகளான காந்தி வீதி, நேரு வீதி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் தீபாவளி விற்பனை களைகட்டியது. கொரோனா பரவலை தடுக்க பொதுமக்கள் முகக்கவசம் அணியுங்கள் என்று போலீசார் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments