10 கோடி முறை செலுத்தும் கொரோனா தடுப்பு மருந்து டிசம்பருக்குள் தயாரிக்கப்படும் - சீரம் நிறுவனத் தலைவர் அடார் பூனாவாலா
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் தடுப்பு மருந்து பத்துக் கோடி முறை செலுத்தும் அளவுக்குத் தயாரிக்கப்பட்டு டிசம்பர் மாதத்தில் வழங்கப்படும் என சீரம் நிறுவனத் தலைவர் அடார் பூனாவாலா தெரிவித்துள்ளார்.
அஸ்ட்ரா செனேக்கா நிறுவனம், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் ஆகியன இணைந்து கண்டுபிடித்துள்ள கொரோனா தடுப்பு மருந்தை இந்தியாவில் தயாரித்து விற்கப் பூனாவைச் சேர்ந்த சீரம் இன்ஸ்டிடியூட் உரிமம் பெற்றுள்ளது.
இந்த மருந்து இறுதிக் கட்டச் சோதனையில் உள்ள நிலையில், டிசம்பர் மாதத்துக்குள் பத்துக்கோடி முறை செலுத்தும் அளவுக்குத் தடுப்பு மருந்து தயாரிக்கப்பட்டு, இந்தியாவில் தடுப்பூசி போடும் நடவடிக்கை தொடங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
Comments