காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல்; இந்திய ராணுவ வீரர்கள் மூன்று பேர் வீரமரணம்

0 3390
காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல்; இந்திய ராணுவ வீரர்கள் மூன்று பேர் வீரமரணம்

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்கியதில் பாதுகாப்பு படை அதிகாரி மற்றும் வீரர்கள் இருவர் என மூவர் வீர மரணம் அடைந்தனர். இந்திய ராணுவம் தொடுத்த பதிலடி தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவத்தினர் 8 பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

காஷ்மீரின் கெரன் பிராந்தியத்தில் உள்ள எல்லைக்கு அருகே சந்தேகத்திற்கு இடமான நடமாட்டம் இருப்பதை ராணுவத்தினர் கண்டறிந்தனர். அங்கு ஊடுருவ முயன்ற பயங்கரவாதிகளை நோக்கி ராணுவம் துப்பாக்கியால் சுட்டதில் அவர்கள் தப்பி ஓடி விட்டனர். இதே நேரத்தில் எல்லைக்கு அப்பால் இருந்து பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது.

அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் பணியில் எல்லை பாதுகாப்பு படையின் சப் -இன்ஸ்பெக்டர் ராகேஷ் உள்ளிட்டோர் ஈடுபட்டிருந்தனர். அப்போது பாகிஸ்தான் ராணுவத்தினர் சுட்ட குண்டு தலையில் தாக்கியதில் ராகேஷ் வீர மரணம் அடைந்தனர். இந்நிலையில் அங்கு பாகிஸ்தான் ராணுவத்தினருக்கு தக்க பதிலடி கொடுக்கும் பணியில் இந்திய பாதுகாப்பு படை ஈடுபட்டுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

வீரமரணம் அடைந்த ராகேஷ் டோப்கால், உத்ரகாண்ட் மாநிலம் ரிஷிகேசின் கங்கா நகரைச் சேர்ந்தவர். இதே போன்று யூரி பிராந்தியத்தில் பாகிஸ்தான் ராணுவம் அத்து மீறி தாக்கியதில் இந்திய பாதுகாப்பு படை வீர ர்கள் இருவர் உயிர் தியாகம் செய்தனர். பொதுமக்கள் மூன்று பேரும் உயிரிழந்தனர்.

இதே போன்று குரூஸ் பந்திப்பூரா, பன்சான், கெரன், தாங்டார், உள்ளிட்ட இடங்களிலும் பாகிஸ்தான் ராணுவம் எல்லை தாண்டி தாக்குதலில் ஈடுபட்டது. இதையடுத்து பதிலடி தாக்குதலில் இந்திய ராணுவம் தீவிரமாக ஈடுபட்டது.

இதில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் 8 பேர் கொல்லப்பட்டதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. அவர்களில் மூன்று பேர் பாகிஸ்தானின் கமாண்டோ படையை சேர்ந்தவர்கள் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் பாகிஸ்தான் ராணுவத்தினர் 12 பேர் காயமடைந்துள்ளதாகவும், அவர்களின் ஆயுத கிடங்கு ஒன்று அழிக்கப்பட்டதாகவும் இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. எல்லையில் பல இடங்களில் மோதல் தொடர்வதாக ராணுவம் கூறியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments