கொரோனா சூழலில் உலகில் ஆயுர்வேதப் பொருட்களின் தேவை அதிகரிப்பு - பிரதமர் மோடி
கொரோனா சூழலில் உலக அளவில் மஞ்சள் போன்ற ஆயுர்வேத மருந்துப் பொருட்களின் தேவை அதிகரித்துள்ளதாகப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
ஆயுர்வேத நாளையொட்டிக் குஜராத்தின் ஜாம்நகரில் உள்ள ஆயுர்வேத ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் உள்ள தேசிய ஆயுர்வேத நிறுவனம் ஆகியவற்றைக் காணொலியில் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, மருத்துவ உலகில் அலோபதியும் ஆயுர்வேதமும் கைகோத்துச் செயல்படுவதாகத் தெரிவித்தார். அதிக மக்கள் தொகையுள்ள நம்நாட்டில் மஞ்சள் பால், அஸ்வகந்தா ஆகியவற்றைப் பயன்படுத்தியதால் கொரோனா கட்டுப்பாட்டில் உள்ளதாகத் தெரிவித்தார்.
Comments