வாக்காளர் பெயர் திட்டமிட்டு நீக்கமா.? - தலைமைத் தேர்தல் அதிகாரி விளக்கம்

0 1939

தேர்தல் ஆணைய விதிகளுக்கு உட்பட்டே, வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்கள் நீக்கப்படுவதாக, தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தெரிவித்திருக்கிறார்.

சென்னை தலைமைச் செயலகத்தில், அவரை சந்தித்த செய்தியாளர்கள், வாக்காளர் பட்டியலில் இருந்து திட்டமிட்டு பெயர்கள் நீக்கப்படுவதாக, சில அரசியல் கட்சிகள் குற்றம்சாட்டுவது குறித்து கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த சாகு, வாக்காளர் ஒருவர், பொதுவாக இடம் மாறினால், அல்லது இறந்தால் மற்றும் இரட்டை பதிவுகள் இருந்தால் மட்டுமே வாக்காளர்கள் பட்டியலில் அவர்கள் நீக்கப்படுவதாக தெரிவித்தார்.

கொரோனாவில் இறந்தாலும், பொதுவாக இறந்தவர்களுக்கு உள்ள விதியான விண்ணப்ப படிவம் 7ஐ பெற்று தான் நீக்கப்படுவதாக, சத்ய பிரதா சாகு கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments