ஒரே குடும்பத்தில் மூவர் கொலை : மஹாராஷ்டிராவில் சேஸிங் - மூவர் கைது

0 4203

சென்னையில் ஒரே குடும்பத்தில் 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் 3 பேரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். மராட்டிய மாநிலம் புனேவில் இருந்து சோலாப்பூர் தப்பிச் சென்ற கொலையாளிகளை காரில் துரத்திச் சென்று தமிழக போலீசார் கைது செய்துள்ளனர்.

ராஜஸ்தான் மாநிலம், பிரோகி ஜவான் பகுதியைச் சேர்ந்த தலில்சந்த், செளகார்பேட்டையில், பைனான்ஸ் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார். விநாயகர் மேஸ்திரி தெருவில், மனைவி புஷ்பா பாய், மகன் ஷீத்தல் உள்ளிட்டோருடன் வசித்து வந்து இவர் உள்ளிட்ட மூன்று பேரை புதன்கிழமை மாலை 4 மணியளவில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

சிசிடிவி காட்சிகள், செல்போன் சிக்னல் உள்ளிட்டவற்றைக் கொண்டு கொலையாளிகள் மஹாராஷ்டிரா தப்பிச் சென்றதை கண்டுபிடித்த போலீசார், உடனடியாக அங்கு விரைந்தனர்.

கொலையில் உறவினர்கள் மூன்று பேர் மற்றும் சிலருக்கு தொடர்பு உள்ளதை கண்டுபிடித்த போலீசார், சோலாப்பூரில் வைத்து, அப்பகுதி போலீசார் மற்றும் புனே போலீசார் உதவியுடன் ஜெயமாலாவின் அண்ணன் கைலாஷ் உட்பட மூவரை கைது செய்தனர். கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

கொலையான ஷீத்தலுக்கும் அவரது மனைவி ஜெயமாலாவுக்கும் இடையே பல ஆண்டுகளாக பிரச்சனை உள்ளது என்று கூறிய மாநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால், ஷீத்தல் - ஜெயமாலா இடையிலான பிரச்சனையை தீர்க்க பல முறை பேச்சுவார்த்தைகள் நடைபெற்றது தெரிய வருகிறது என்றும் கூறினார்.

கொலையில் ஈடுபட்டது யார், பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் உள்ளிட்டவை தொடர்பான சிசிடிவி காட்சிகள் சிக்கியுள்ளதாகக் கூறிய அவர், கொலையில் ஜெயமாலாவுக்கு தொடர்பு உள்ளதா என்பதை தற்போது கூறுவது சரியாக இருக்காது என்றார்.

சென்னையில் 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரத்தில் கைதான நபர் காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் தலைமறைவாக இருந்தது தெரியவந்துள்ளது.

செளகார்பேட்டையில், தலில்சந்த், அவரது மனைவி புஷ்பா பாய், மகன் ஷீத்தல் மூவரும் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக ஷீத்தலின் மனைவி ஜெயமாலாவின் அண்ணன் கைலாஷ் உட்பட 3 பேர் மகாராஷ்டிரா மாநிலத்தில் கைது செய்யப்பட்டனர்.

இந்த கைலாஷ், மோசடி வழக்கில் புனே போலீசாரால் தேடப்பட்டு வந்தவன் என்பதும், காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் தலைமறைவாக இருந்ததும் தெரியவந்துள்ளது.

கள்ளச்சந்தையில் சில துப்பாக்கிகளை வாங்கியதாக அவன் வாக்குமூலம் கொடுத்துள்ளதாகவும் போலீசார் கூறுகின்றனர்.

அத்துடன் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கார், ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரியின் கார் என்பதும் தெரியவந்துள்ள நிலையில், கைலாஷுடன் தொடர்பில் இருந்தவர்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments