காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அரசியல் தெளிவற்றவர்: பாரக் ஒபாமா கருத்து

0 10464
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அரசியல் தெளிவற்றவர்: பாரக் ஒபாமா கருத்து

காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி, அரசியல் தெளிவற்றவராக திகழ்வதாக, அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா, தெரிவித்து உள்ளார்.

ஒபாமா எழுதியுள்ள 'A Promised Land' என்ற புத்தகம் குறித்து, அமெரிக்காவின் பிரபல நாளிதழான நியூயார்க் டைம்ஸ், தலையங்க விமர்சனம் செய்துள்ளது. அதில், ராகுல் காந்தி ஒரு பதற்றமான, அறியப்படாத குணம் கொண்டவர் என்று, ஒபாமா தனது புத்தகத்தில் கூறியிருப்பதாக, குறிப்பிட்டுள்ளது.

ஆசிரியரிடம், பாடத்தை மனப்பாடம் செய்து ஒப்புவிக்கும் மாணவரைப் போலவே, ராகுல் காந்தி, அதீத ஆர்வம் கொண்டவராகவே இருப்பதாகவும், ஒபாமா குறிப்பிட்டுள்ளதாக, நியூயார்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது. மேலும், ஒரு விஷயத்தை முழுமையாக அறிந்து கொள்வதில், ஆர்வம் இல்லாதவராகவும், ராகுல்காந்தி திகழ்கிறார் என்றும் ஒபாமா எழுதியிருப்பதாக, கூறியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments