”வவ்வால்களுக்காக 100 ஆண்டுகளாக பட்டாசு வெடிப்பதில்லை” மனிதநேயத்தால் உயர்ந்து நிற்க்கும் மயிலாடுதுறை மக்கள்..!
மயிலாடுதுறை மாவட்டம் பெரம்பூரில் ஆலமரங்களில் 100 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வரும் வவ்வால்களை பாதுகாக்கும் வகையில் கிராமமக்கள் தீபாவளி அன்றும் பட்டாசுகளை வெடிப்பதில்லை.
வவ்வாளடி எனப்படும் இப்பகுதியில் வாழும் ஆயிரக்கணக்கான வவ்வால்களைப் பாதுகாக்க வேட்டைத் தடுப்புக் குழுவினையும் கிராமத்தினர் ஏற்படுத்தி உள்ளனர்.
இதேபோல், சிவகங்கை மாவட்டம் கொள்ளுக்குடிப்பட்டியில், பறவைகளுக்காக 1975 முதல் 45ஆண்டுகளாக பட்டாசு வெடிக்காமல் தீபாவளி கொண்டாடும் கிராமத்தினருக்கு ஆட்சியர் ஜெயகாந்தன் இனிப்பு வழங்கி வாழ்த்து தெரிவித்தார். இங்கு ஜூலை முதல் மார்ச் வரை வெளிநாட்டு பறவைகள் வந்து தங்கி இனப்பெருக்கம் செய்கின்றன.
Comments