பிரதமர் மோடியுடன் ஜோ பைடன் தொலைபேசியில் ஏன் பேசவில்லை? வெளியுறவு அமைச்சகம் விளக்கம்

0 14611
பிரதமர் மோடியுடன் ஜோ பைடன் தொலைபேசியில் ஏன் பேசவில்லை? வெளியுறவு அமைச்சகம் விளக்கம்

பிரதமர் மோடியும் அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்க உள்ள ஜோ பைடனும் உரிய நேரத்தில் தொலைபேசியில் பேசுவார்கள் என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அதிபர் தேர்தலில் வென்ற ஜோ பைடன் பிரான்ஸ், ஜெர்மனி, இங்கிலாந்து, அயர்லாந்து, ஆஸ்திரேலியா, ஜப்பான், தென் கொரியா போன்ற நட்பு நாடுகளின் தலைவர்களுடன் தொலைபேசியில் பேசியுள்ள போதும் அமெரிக்காவுக்கு நெருங்கிய நட்பு நாடான இந்தியாவின் பிரதமர் மோடியுடன் இன்னும் பேசவில்லை.

இது குறித்த வினாக்களுக்கு விளக்கம் அளித்துள்ள வெளியுறவு அமைச்சகம் இரு தலைவர்களுக்கும் சாதகமான நேரத்தில் பேச்சுவார்த்தை நடைபெறும் என்று தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments