காவலில் எடுத்து விசாரிக்கப்பட்ட பினீஷ் கோடியேரி சிறையில் அடைப்பு
போதை பொருள் கடத்தல் வழக்கில் காவலில் எடுத்து விசாரிக்கப்பட்ட பினீஷ் கோடியேரி, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார்.
கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கோடியேரி பாலகிருஷ்ணனின் மகன் பினீஷ் கோடியேரியை கடந்த 2 வாரங்களுக்கு முன் அமலாக்கத்துறை அதிகாரிகள் பெங்களூரு வரவழைத்து கைது செய்தனர்.
பின்னர் 12 நாட்கள் அமலாக்கத்துறை காவலில் வைத்து விசாரிக்கப்பட்டார். விசாரணையில் பினீஷ் கோடியேரி கோடிக்கணக்கில் மதிப்பிலான போதை பொருள் கடத்தலுக்கு பண உதவி செய்தது தெரியவந்தது. 12 நாள் காவல் முடிவடைந்ததை தொடர்ந்து 4 நாட்கள் நீதிமன்ற காவலில் பரப்பன அக்ரஹாரா சிறையில் அவர் அடைக்கப்பட்டார்.
Comments