பீகார் முதலமைச்சராக பதவி ஏற்க உரிமை கோரவில்லை : நிதிஷ்குமார்

0 6056
பீகார் முதலமைச்சராக தான் உரிமை கோரவில்லை என்று நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார்.

பீகார் முதலமைச்சராக தான் உரிமை கோரவில்லை என்று நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார்.

அண்மையில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதான தளம் - பாஜக கூட்டணி 125 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துள்ளது.

இந்நிலையில் பாட்னாவில் செய்தியாளர்களை சந்தித்த நிதிஷ்குமார், நாளை நடைபெற இருக்கும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் கூட்டத்தில் தான் முதலமைச்சர் யார் என்பது முடிவு செய்யப்படும் என்றார்.

தேர்தல் முடிவுகள் குறித்து ஆய்வு செய்து வருவதாக கூறிய அவர், இன்னும் பதவி ஏற்பு விழா தேதி குறித்து முடிவு செய்யப்படவில்லை என்றார். தீபாவளி முடிந்த பின் அல்லது சாட் பூஜை நிறைவடைந்த பின் பதவி ஏற்பு விழா நடத்தப்படும் என்று நிதிஷ்குமார் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments