சபரிமலை வரும் பக்தர்களுக்காக மருத்துவ முகாம்கள் மற்றும் அறுவை சிகிச்சை மையம் - கேரள சுகாதாரத்துறை அமைச்சர்

0 1663

பரிமலைக்கு வரும் பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு அங்கு மருத்துவ முகாம்கள் மற்றும் அறுவை சிகிச்சை மையம் அமைக்கப்படுவதாக கேரள அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து கேரள சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா கூறுகையில், மண்டல, மகர விளக்கு பூஜையையொட்டி வருகிற 16-ந் தேதி முதல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்றார்.

பம்பையில் இருந்து சன்னிதானம் வரை மருத்துவ முகாம்கள் மற்றும் மருத்துவக்குழுக்கள் அமைக்கப்படும் என்று அவர் கூறினார். பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு, சன்னிதானத்தில் ஒரு அவசர அறுவை சிகிச்சை மையம் அமைக்கப்படும் என்றும், பல்வேறு இடங்களில் சிறப்பு மருந்தகங்கள் அமைக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

சுவாச கோளாறு, காய்ச்சல், சளி மற்றும் பிற நோய்கள் இருக்கும் பக்தர்கள் கோவிலுக்கு வர வேண்டாம் என்று அவர் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments