கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், பூண்டி செம்பரம்பாக்கம் ஏரிகளின் நீர்மட்டத்தை கண்காணிக்க ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தல்
கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், பூண்டி செம்பரம்பாக்கம் ஏரிகளின் நீர்மட்டத்தை கண்காணிக்க வேண்டும் என்று காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர்களுக்கு மத்திய நீர்வள ஆணையம் அறிவுறுத்தி இருக்கிறது.
மழை பெய்து வருவதன் காரணமாக நீர்வரத்து அதிகரித்து பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவில் 43 சதவீதமும், செம்பரம்பாக்கம் ஏரியில் 69 சதவீதம் நிரம்பி உள்ளது. நாளை முதல் வரும் 18 ஆம் தேதி வரை கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், 2 ஏரிகளும் நிரம்பி வெள்ளப் பெருக்கு ஏற்படலாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
எனவே தாழ்வான இடங்களில் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய நீர்வள ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.
Comments