ஆசியான் அமைப்பு நாடுகளின் உச்சி மாநாடு டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றது
பிரதமர் மோடி தலைமையில் இன்று இந்தியா-ஆசியான் உச்சி மாநாடு, காணொலி காட்சி மூலம் நடைபெற்றது.
தென்கிழக்கு ஆசிய நாடுகள் சங்கமான‘ஆசியான்’ அமைப்பில், இந்தோனேசியா, மலேசியா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து, புருனே, வியட்நாம், லாவோஸ், மியான்மர், கம்போடியா ஆகிய 10 நாடுகள் இடம் பெற்றுள்ளன.
17-வது இந்தியா-ஆசியான் உச்சி மாநாடு இன்று காணொலி காட்சி மூலம் நடைபெற்றது. பிரதமர் மோடியும், வியட்நாம் பிரதமர் நுயன் சுவான் புக்கும் கூட்டாக தலைமை தாங்கினார்கள்.
கூட்டதில் பேசிய பிரதமர் மோடி, ஆசியான் நாடுகளுடன் வர்த்தகம், பொருளாதாரம், கடல்சார் தொடர்பு உள்ளிட்டவற்றை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார். இந்த மாநாடு ஆசியான் நாடுகளுக்கு இடையிலான உறவை மேலும் வலுப்படுத்துமென அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
Comments