தமிழகத்தில் அடுத்த இரு நாட்களுக்கு மழை வலுவடையும் - வானிலை ஆய்வு மையம் தகவல்
வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி இருப்பதால் அடுத்த இரு நாட்களுக்கு தமிழகத்தின் 8 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இதுகுறித்து அந்த மையம் விடுத்துள்ள செய்தி குறிப்பில், தென்மேற்கு வங்க கடலில் இலங்கை முதல் வடதமிழக கடற்பகுதி வரை குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இதனால் தமிழகத்தில் அடுத்த இரு நாட்களுக்கு மழை வலுக்குமென குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அடுத்த இரு நாட்களில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.
சென்னை நகரில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஓரிரு இடங்களில் மிதமானது முதல் கனமழை வரை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments