எஸ்-400 ரக வான் ஏவுகணை தடுப்பு அமைப்பு, திட்டமிட்ட காலத்திற்கு முன்பே இந்தியாவிடம் ஒப்படைக்கப்படும் என ரஷ்யா மீண்டும் உறுதி
இந்தியாவிடம், எஸ்-400 ரக வான் ஏவுகணை தடுப்பு அமைப்பு, திட்டமிட்ட காலத்திற்கு முன்பே, தயாரித்து ஒப்படைக்கப்படும் என ரஷ்யா மீண்டும் உறுதி கூறியிருக்கிறது.
சுமார் 38 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில், ரஷ்யாவிடமிருந்து, எஸ்-400 ரக வான் ஏவுகணை தடுப்பு அமைப்பை வாங்க, கடந்த 2018ஆம் ஆண்டு இந்தியா ஒப்பந்தம் செய்தது. அமெரிக்காவின் எதிர்ப்பையும் மீறி, இந்த ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில், மாஸ்கோவில், காணொலி வாயிலாக செய்தியாளர்களிடம் பேசிய, ரஷ்யாவின் தளவாட உற்பத்தி திட்ட அமைப்பின் துணை இயக்குநர் ரோமன் பாபுஸ்கின் (Roman Babushkin), இந்தியாவுடன் ஒப்பந்தம் செய்தவாறு, எஸ்-400 வான் ஏவுகணை தடுப்பு அமைப்பை, திட்டமிட்ட காலத்திற்கு முன்பே, வழங்க, முடிவு செய்யப்பட்டு, அதற்காக, கொரோனா அச்சுறுத்தலையும் மீறி, கடுமையாக உழைத்துக் கொண்டிருப்பதாக தெரிவித்தார்.
Comments