தொழிலாளர் சங்கம் போராட்டம் காரணமாக பெங்களூருவிலுள்ள டொயோட்டா கார் தயாரிப்பு ஆலை மூடல்
தொழிலாளர் சங்கத்தின் போராட்டம் காரணமாக பெங்களூருவிலுள்ள உற்பத்தி ஆலையை டோயோட்டா நிறுவனம் மூடி உள்ளது. பிடதியில் 432 ஏக்கரில் உள்ள ஆலையில் இன்னோவா, பார்ச்சூனர், கேம்ரே போன்ற கார்கள் தயாரிக்கப்படுகின்றன.
ஆண்டுக்கு 3 லட்சம் கார்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்ட ஆலையில், 6500க்கும் அதிகமான ஊழியர்கள் வேலை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் நிறுவனத்தின் கொள்கைகளுக்கு எதிராக செயல்பட்டதாக கூறி, ஊழியர் ஒருவரை டொயோட்டா நிறுவனம் பணியிடை நீக்கம் செய்தது.
அதனைக் கண்டித்து தொழிலாளர் சங்கம் பணியை புறக்கணித்து போராட்டம் நடத்தியதால், ஆலை முழுவதுமாக மூடப்பட்டுள்ளது.
தொழிலாளர்கள் போராட்டத்தால் ஆலைகள் மூடப்படுவது தொடர்ந்தால், வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்ய முன்வராது என்று நெட்டிசன்கள் பலர் கருத்து பதிவிட்டுள்ளனர்.
Comments