பொருளாதாரத்தை ஊக்குவிக்க ரூ.2.65 லட்சம் கோடி திட்டம் - மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
இந்தியாவின் பொருளாதராத்தை ஊக்குவிக்கும் விதத்தில் 2 லட்சத்து 65 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான நிதி தொகுப்பு திட்டத்தை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
டெல்லியில் பேசிய அவர், வேலைவாய்ப்பு அளிப்பதை ஊக்குவிக்கும் விதமாக தொழிலாளர்கள் மற்றும் நிறுவனம் தரப்பில் அளிக்கப்படும் தலா 12 சதவீதம் இபிஎப் நிதியை மத்திய அரசே மானியமாக வழங்கும் என்று தெரிவித்தார்.
கடந்த அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வரை பணியில் சேரும் ஊழியர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்று குறிப்பிட்டார்.
மொபைல் உற்பத்தி, எலக்ட்ரானிக் உதிரிபாகங்கள் மற்றும் மருந்து தயாரிப்பு துறையை மேம்படுத்த ஒரு லட்சத்து 46 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ஊக்கத்தொகை திட்டத்தையும் அவர் அறிவித்தார்.
Comments