பீகார் தேர்தலில் வெறும் 12,768 வாக்குகள் வித்தியாசத்தில் ஆட்சியை பிடித்த பாஜக கூட்டணி..!
பீகார் தேர்தலில் மகா கூட்டணியைவிடத் தேசிய ஜனநாயகக் கூட்டணி மொத்தத்தில் 12ஆயிரத்து 768 வாக்குகளே அதிகம் பெற்று ஆட்சியை பிடித்துள்ளது.
பீகார் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 125 தொகுதிகளையும், மகா கூட்டணி 110 தொகுதிகளையும் கைப்பற்றின.
ராஷ்டிரிய ஜனதாதளம் - காங்கிரஸ் இணைந்த மகா கூட்டணி மொத்தம் ஒரு கோடியே 56 லட்சத்து 88 ஆயிரத்து 458 வாக்குகளைப் பெற்றுள்ளது. அதைவிட வெறும் 12 ஆயிரத்து 768 வாக்குகளையே அதிகமாகப் பெற்ற பாஜக - ஐக்கிய ஜனதா தளம் இணைந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது.
இரு அணிகளுக்கு இடையிலான வாக்கு வித்தியாசம் பூஜ்ஜியம் புள்ளி பூஜ்ஜியம் மூன்று விழுக்காடு மட்டுமே.
Comments