ஓசூரில் பட்டாசு விற்பனை மந்தம் - பட்டாசு விற்பனையாளர்கள் வேதனை..!

0 2179

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியில் பட்டாசு விற்பனை மந்தமாக உள்ளதால் பட்டாசு கடை உரிமையாளர்கள் வேதனை அடைந்துள்ளனர்.

ஓசூர் அருகேயுள்ள அத்திப்பள்ளி பகுதியில் 200க்கும் மேற்பட்ட பட்டாசு கடைகள் திறக்கப்பட்டுள்ளன. வழக்கமாக அதிக அளவில் பட்டாசுகளை வாங்கிச்செல்லும் மக்கள், இம்முறை பட்டாசு வாங்க ஆர்வம் காட்டவில்லை என விற்பனையாளர்கள் கூறுகின்றனர்.

கடந்த வருடம் ஒவ்வொரு கடையிலும் தீபாவளிக்கு 15 நாட்கள் முன்னதாக சுமார் 25 லட்சம் வரை நடந்த பட்டாசு விற்பனை, இவ்வருடம் ஓரிரு நாட்களே உள்ள நிலையில் 20 ஆயிரம் ரூபாய் வரைக்கு கூட விற்பனை இல்லை என்று வியாபாரிகள் கூறுகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments