மன்னார்குடி - வைதேகிக்காகக் காத்திருக்கும் காதலன்

0 36562

பெண் காவலர் காதலித்து ஏமாற்றியதால் விஷம் குடித்த பைனான்சியர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மன்னார்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சேலத்தை சேர்ந்த பைனான்சியர் பரமசிவம் என்பவரின் மகன் பிரபு என்ற 25 வயது இளைஞர் திருச்சியில் பைனான்ஸ் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார். அப்போது, திருச்சி காவல்துறையில் போலீஸாக பணியாற்றிய வைதேகிக்கும் பிரபுவுக்கும் காதல் மலர்ந்துள்ளது. பிறகு, திருவாரூர் போலீஸ் நிலையத்துக்கு வைதேகி மாற்றப்பட்டுள்ளார். தொடர்ந்து, திருவாரூர் காவலர் குடியிருப்பிலேயே லிவிங் டுகெதராக பிரபுவுடன் வைதேகி இணைந்து வாழ்ந்ததாக சொல்லப்படுகிறது. தற்போது, மன்னார்குடி காவல் நிலையத்தில் வைதேகி பணி புரிந்து வருகிறார்.

இந்த நிலையில், பிரபு வைதேகியை திருமணம் செய்து கொள்ள அவரின் பெற்றேரிடத்தில் பேசியுள்ளார். வைதேகி குடும்பத்தார் திருமணத்துக்கு மறுத்ததாக சொல்லப்படுகிறது. இதற்கு பிறகு, வைதேகியின் நடவடிக்கையில் மாற்றம் தெரிந்துள்ளது.' நீ வேறு யாரையாவது திருமணம் செய்து கொள்' என்று பிரபுவிடத்தில் வைதேதி கூறியதாக தெரிகிறது. ஆனால், பிரபு வைதேகியை திருமணம் செய்து கொள்வதில் உறுதியாக இருந்துள்ளார்.

தன்னை திருமணம் செய்ய மறுத்து, காதலித்து ஏமாற்றி விட்டதாக மன்னார்குடி காவல் நிலையத்தில் வைதேகி மீது புரபு புகாரும் அளித்துள்ளார். ஆனால், நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று சொல்லப்படுகிறது. இதன் காரணமாக, மன வேதனையடைந்த பிரபு நேற்று விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மன்னார்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். தற்போது, உயிருக்கு ஆபத்தான கட்டத்தை தாண்டியுள்ள பிரபு,  வாழ்ந்தாள் வைதேகியுடன்தான் வாழ்வேன் என்று உறுதியுடன் கூறியுள்ளார். 

தற்போது, திருவாரூர் எஸ்.பி. இந்த விவகாரத்தை விசாரித்து வருகிறார். பெண் போலீஸ் வைதேகிக்கு கவுன்சிலிங் கொடுக்கப்பட்டு வருகிறது. சிகிச்சையிலிருந்து பிரபு மீண்டு வந்ததும், அவருக்கும் கவுன்சிலிங் கொடுக்கப்படும் என்று போலீஸ் தரப்பில் சொல்லப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments