சுமார் 8 மாதங்களுக்கு பிறகு தமிழகம் - கர்நாடகா இடையே பேருந்து சேவை..!

0 2766
தமிழகம் - கர்நாடகா மாநிலங்களுக்கு இடையேயான அரசு பேருந்து சேவை சுமார் 8 மாதங்களுக்கு பிறகு தொடங்கியுள்ளது.

தமிழகம் - கர்நாடகா மாநிலங்களுக்கு இடையேயான அரசு பேருந்து சேவை சுமார் 8 மாதங்களுக்கு பிறகு தொடங்கியுள்ளது.

தமிழகம் - கர்நாடக மாநிலத்தை இணைக்கும் முக்கிய வழிப்பாதையாக சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலை உள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர் செல்வதற்கு ஏதுவாக இரு மாநிலங்களிடையே தற்காலிகமாக 6 நாட்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

சத்தியமங்கலம் பேருந்து நிலையத்திலிருந்து மைசூருக்கு புறப்பட்ட அரசு பேருந்தில் பயணிகள் முகக்கசவம் அணிந்து பயணித்தனர். நீண்ட நாள்களுக்கு பின் மைசூருக்கு பேருந்துகள் இயக்கப்பட்டதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ள நிலையில், வரவேற்பை பொறுத்து பேருந்துகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments