எம்பிபிஎஸ் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் 16ந் தேதி வெளியீடு... அமைச்சர் விஜயபாஸ்கர்

0 1818
எம்பிபிஎஸ் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் 16ந் தேதி வெளியீடு... அமைச்சர் விஜயபாஸ்கர்

மருத்துவ படிப்புக்கான தரவரிசைப் பட்டியல் வரும் 16 ஆம் தேதி வெளியிடப்படவுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மருத்துவபடிப்புக்கான கவுன்சிலிங் வரும் 18 அல்லது 19 ஆம் தேதி துவங்க வாய்ப்புள்ளதாக கூறினார்.

4061 எம்பிபிஎஸ் இடங்களுக்கான கவுன்சிலிங்கில் கலந்து கொள்ள இதுவரை 34 ஆயிரத்து 427 பேர் விண்ணப்பித்துள்ளனர் என விஜயபாஸ்கர் கூறினார்.

7.5 சதவிகித உள் ஒதுக்கீட்டின்படி எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ்-ல் அரசுப் பள்ளி மாணவர்கள்களுக்கு 395 இடங்கள் கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments