தூய்மைப்படுத்தாமல் யமுனை ஆற்றில் விடப்படும் ஆலைக் கழிவுகள்... மிதந்து செல்லும் நுரைப்படலம்
தொழிற்சாலைக் கழிவுகள் கலந்து நீர் மாசுபட்டுள்ளதால் டெல்லியில் யமுனை ஆற்றில் நுரைப்படலம் மிதந்து செல்கிறது.
அரியானா, டெல்லி, உத்தரப்பிரதேச மாநிலங்களில் யமுனை ஆற்றங்கரையில் உள்ள தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் தூய்மைப்படுத்தப்படாமல் ஆற்றில் கலந்து வருகிறது.
இந்தக் கழிவுநீரால் ஆற்றில் நுரைப்படலம் உருவாகிப் பெரும்பாலான நீர்ப்பரப்பு மூடப்பட்டுள்ளது. இதனால் நீரில் ஆக்சிஜன் அளவு குறைந்து நீர்வாழ் உயிரினங்கள் அழிந்துபோகும் சூழல் ஏற்பட்டுள்ளது.
Comments