அ.இ.த.த.வி.ம.இ என்ற பெயரில் புதிய இயக்கம்..! நிர்வாகிகளை மாற்றிய விஜய்...

0 23038
அ.இ.த.த.வி.ம.இ என்ற பெயரில் புதிய இயக்கம்..! நிர்வாகிகளை மாற்றிய விஜய்...

ஆரம்பகால விஜய் மக்கள் இயக்கத்தை எஸ்.ஏ.சந்திரசேகரன் கைப்பற்றிய நிலையில் அ.இ.த.த.வி. மக்கள் இயக்கம் என்ற பெயரில் லெட்டர்பேடு தயாரித்து அதன் மூலம் விஜய், புதிய நிர்வாகிகளை நியமித்து வருகின்றார்.

விஜய் மக்கள் இயக்கத்தை அ.இ.த.வி.ம.இ கட்சியாக மாற்றி விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரன், இயக்கத்தை கைப்பற்றிவிட்ட நிலையில், அகில இந்திய தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் பதிவெண் இல்லாத லெட்டர் பேடு ஒன்றை விஜய்க்காக தயார் செய்து கொடுத்துள்ளார் இயக்கப் பொறுப்பாளர் புஸ்ஸி ஆனந்து.

அந்த புதிய லெட்டர் பேடில் முதல் முறையாக நடிகர் விஜய் கையெழுத்துடன் நிர்வாகிகள் மாற்றப்பட்டியலை புஸ்ஸி ஆனந்து வெளியிட்டு உள்ளார். தமிழகத்தில் மதுரை , திருப்பத்தூர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களுக்கும், கேரளாவில் கண்ணூர்,காசர்கோடு, கொல்லம்,கோட்டயம், கோழிக்கோடு,மலப்புரம், பாலக்காடு உள்ளிட்ட பகுதிகளுக்கும் புதிய நிர்வாகிகளின் பெயரை அறிவித்துள்ளார் நடிகர் விஜய். ஏற்கனவே அங்கு இருந்த எஸ்.ஏ.சியின் ஆதரவாளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.

அத்தோடில்லாமல் தனது புகைப்படம், கொடி, இயக்கத்தின் பெயர் அகியவற்றை மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகளின் அனுமதிபெற்றே பயன்படுத்த வேண்டும் என்றும் மீறினால் ஒழுங்கு நடவடிக்கை மேற்க்கொள்ளப்படும் என்றும் விஜய் எச்சரித்துள்ளார்.

விஜய்யின் இந்த அறிவிப்பு ரசிகர்களுக்கு உற்சாகமூட்டியுள்ள நிலையில், அகில இந்திய விஜய் மக்கள் இயக்கத்தின் அத்தனை அதிகாரத்தையும் கையில் வைத்திருக்கின்ற எஸ்.ஏ.சந்திர சேகரனின் கட்சிக்கும், விஜய்யின் அமைப்புக்கும், ஒரே கொடி பயன்படுத்தப்படுமா? அல்லது விஜய் தனது மக்கள் இயக்கத்தின் கொடியை மாற்றுவாரா ? என ரசிகர்களிடையே கேள்வி எழுந்துள்ளது. கொடி, பெயர், படத்துடன் இயக்கத்தை கைப்பற்றிய தனது தந்தை சந்திரசேகரன் மீது விஜய் எப்போது சட்ட நடவடிக்கை எடுக்கப்போகிறார் என்ற எதிர்பர்ப்பும் ஏற்பட்டுள்ளது.

எஸ்.ஏ.சி தொடங்கி உள்ள அ.இ.த.வி.ம.இ கட்சிக்கு தொண்டர்கள் வருகிறார்களோ இல்லையோ தினம் தினம் புது புது சோதனைகள் வரிசை கட்டி வந்துகொண்டே இருப்பது குறிப்பிடதக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments