தீபாவளியையொட்டி தமிழ்நாடு-கர்நாடகா இடையே பேருந்துப் போக்குவரத்துக்கு அனுமதி
தீபாவளியையொட்டி, தமிழ்நாடு - கர்நாடகா இடையே, 6 நாட்களுக்கு மட்டும், பேருந்து போக்குவரத்து தொடங்கியுள்ளது.
கொரோனா ஊரடங்கால் இரு மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்து நிறுத்தப்பட்டு இருந்த நிலையில், தீபாவளியையொட்டி இருமாநிலங்களைச் சேர்ந்தவர்கள் இ-பாஸ் இன்றி சொந்த ஊர் திரும்பும் வகையில், தமிழக அரசு பேருந்து போக்குவரத்தை அனுமதித்துள்ளது.
கொரோனா முன்னெச்சரிக்கையாக பயணிகள் மாஸ்க் அணிவது, தனிநபர் இடைவெளியை பின்பற்றுவது கட்டாயம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தீபாவளியையொட்டி தமிழ்நாடு-கர்நாடகா இடையே பேருந்துப் போக்குவரத்துக்கு அனுமதி #Diwali | #Tamilnadu | #Karnataka | #BusTransport | #Covid19 https://t.co/CkxMpfFYRp
— Polimer News (@polimernews) November 12, 2020
Comments