நெருங்கும் தீபாவளி.. வழக்கம் போல் களை கட்டிய, தியாகராயர் நகர் ரங்கநாதன் தெரு..!
தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 2 நாட்களே இருப்பதால், ஜவுளி கடைகளில் கடைசி நிமிட வியாபாரம் சூடு பிடித்துள்ளது.
தியாகராயநகர் - ரங்கநாதன் தெரு, வழக்கம் போல் இந்தாண்டும் களை கட்டியது. இப்பகுதியில் எங்கு திரும்பினாலும் மனித தலைகளாக காட்சி அளித்தது. கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வலியுறுத்திய போலீசார், குற்றச்செயல்கள் நிகழாமல் தடுக்க, 300 க்கும் மேற்பட்ட காமிராக்கள் மூலம் கண்காணித்தனர்.
இதேபோல, வண்ணாரப்பேட்டை பகுதியிலும் தீபாவளி கொண்டாட்டத்திற்காக புத்தாடைகள் வாங்க, ஜவுளி கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. மாலை நேரத்தில் சென்னையில் பரவலாக பெய்த மழையையும் பொருட்படுத்தாமல் குடும்பம் - குடும்பமாக வந்து, புத்தாடைகள் வாங்க ஆர்வம் காட்டினர்.
Comments