உத்திரகண்டில் இந்திய ராணுவ தலைமை தளபதி எம்.எம்.நரவனே முகாம், இந்தியா-சீனா படைவிலக்கம் நடைபெற உள்ள நிலையில் திடீர் ஆய்வு..!
லடாக்கில், இந்தியா- சீனா படைகள் விலக்கம் நடைபெற உள்ளதாக கூறப்படும் நிலையில், இந்திய ராணுவ தலைமைத் தளபதி, ஜெனரல் எம்.எம்.நரவனே, உத்தரகண்ட் மாநிலத்திற்கு பயணமாகியுள்ளார்.
இந்தியா-சீனா இடையேயான எல்லைப் பகுதியில், பெரும்பாலான தூரத்தை, உத்திரகண்ட் மாநிலம் கொண்டுள்ளது. தீபாவளியையொட்டி, படைவிலக்கம் நிகழக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதால், அங்குள்ள சூழல் குறித்தும், படிப்படியாக படைகளை விலக்கிக் கொள்வது குறித்தும், ஆய்வு செய்வதற்காக, இந்திய ராணுவ தலைமை தளபதி எம்.எம்.நரவணே, உத்திரகண்டிற்கு பயணமாகியுள்ளார்.
அங்கு, எல்லை படைவிலக்கம், எதிரிகளுக்கு சாதமாகிவிடக் கூடாது என்பதில், எந்தளவிற்கு கவனமாக செயல்பட வேண்டும் என்பது பற்றி முக்கிய கருத்துப்பகிர்வை மேற்கொள்வதாக, தகவல் வெளியாகியுள்ளது.
Comments