அதிபர் தோல்வியை டிரம்ப் ஏற்க மறுப்பது தர்மசங்கடத்தை உருவாக்கி உள்ளது- ஜோ பைடன்
அமெரிக்காவில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் பெற்றுள்ள தோல்வியை டிரம்ப் ஏற்க மறுப்பது தர்மசங்கடமாக உள்ளதாக ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
வில்மிங்டன் நகரில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த ஜோ பைடன், டிரம்ப் தோல்வியை ஏற்க மறுப்பது தர்மசங்கடமாக உள்ளது என்றார்.டிரம்பின் நடவடிக்கை அதிபரின் பாரம்பரியத்திற்கு உகந்ததாக இல்லை என்ற அவர், ஜனவரி மாதத்தில் அனைத்தும் பலனளிக்கும் விதமாகவே அமையப் போகிறது என்றார்.
ஆட்சி மாற்றம் நடந்து விடும் என்பதால் சட்ட நடவடிக்கை தேவையில்லை என நினைப்பதாக குறிப்பிட்டார்.குடியரசுக் கட்சியினர் தமது வெற்றியை நிச்சயம் ஏற்றுக்கொள்வார்கள் என அவர் தெரிவித்தார். ஒரு மாற்றம் ஏற்பட்டுள்ளது என்பதை அமெரிக்க மக்கள் புரிந்து கொண்டுள்ளதாக அவர் கூறினார்.
Comments