பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பு மருந்தை -70 டிகிரி செல்சியஸ் உறைநிலையில் வைத்திருப்பது கடினமான செயல் - டெல்லி எய்ம்ஸ் இயக்குநர்
பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பு மருந்தை மைனஸ் 70 டிகிரி செல்சியஸ் உறைநிலையில் வைத்திருப்பது இந்தியா போன்ற வளரும் நாடுகளுக்குக் கடினமான செயல் என டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் ரண்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.
ஜெர்மனியின் பயான்டெக் நிறுவனத்துடன் இணைந்து அமெரிக்காவின் பைசர் நிறுவனம் தயாரித்துள்ள மருந்து கொரோனாவைத் தடுப்பதில் 90 விழுக்காடு செயல்திறன் கொண்டது எனச் சோதனையில் தெரியவந்துள்ளது.
அதே நேரத்தில் இந்த மருந்தைப் பயன்படுத்தும் வரை மைனஸ் 70 டிகிரி செல்சியஸ் உறைநிலையில் வைத்திருக்க வேண்டும்.
இது குறித்துக் கருத்துத் தெரிவித்த டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் ரண்தீப் குலேரியா, மருந்தை வைப்பதற்காக ஊரகப் பகுதிகளில் குளிர்பதன வசதி செய்வது இந்தியா போன்ற வளரும் நாடுகளுக்குக் கடினமான செயல் எனக் குறிப்பிட்டார்.
Comments