திருவிழாக்களைவிட மனித உயிர்கள் முக்கியம்; பட்டாசு வெடிக்க விதிக்கப்பட்ட தடையை நீக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

0 3686
திருவிழாக்களைவிட மனித உயிர்கள் முக்கியம் என்று கூறி பட்டாசு வெடிக்க விதிக்கப்பட்ட தடையை நீக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

திருவிழாக்களைவிட மனித உயிர்கள் முக்கியம் என்று கூறி பட்டாசு வெடிக்க விதிக்கப்பட்ட தடையை நீக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

மேற்கு வங்கத்தில் வரும் பண்டிகை காலங்களில் பட்டாசுகளை வெடிப்பதற்கு தடை விதித்து அந்த மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

மனுவை விசாரித்த நீதிபதி சந்திரசூட் அமர்வு, பட்டாசு வெடிக்க விதிக்கப்பட்ட தடையை நீக்க மறுத்து, மனுதாரரின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

திருவிழாக்கள் முக்கியம் என்ற நீதிபதிகள், மனித உயிர்கள் அதை விட முக்கியம் என்றனர். தொற்றுநோய்களுக்கு மத்தியில் வாழும் இந்த சூழ்நிலையில், நிலைமையை மேம்படுத்துவதற்காக அரசு எடுத்துள்ள இந்த முடிவை அனைவரும் ஆதரிக்க முன்வர வேண்டும்’ என்று நீதிபதி கேட்டுக்கொண்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments